அழிந்து வரும் விடத்தல்தீவு கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம்.

கடல் வளம் சூழப்பட்ட எம் கிராமம் தொன்டுதொட்டு கடல் வளத்தை வாழ்வாதரமாக மட்டும் கொண்டே வாழ்கையினை நகர்த்தி வருகின்றது. போரின் பின்னரான காலப்பகுதியான இவ் கால பகுதியில் முதலாளித்துவத்தின் கைகளில் அகப்பட்டு எம் கிராமம் வாழ்வாதரத்தை பெரிதும் இழந்த நிலையில் நிற்கின்றது. பண முதலைகள் தமது பணபலத்தை அதிகரிக்க எம் இயற்கை வளங்களை சுரண்டி தம் பண வளங்களை அதிகரித்து வருகின்றனர். செல்வசெழிப்புடன் வழ்ந்து வந்த எம் மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்குகூட அல்லள்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைத்து வகையிலும் பிரிந்து நிற்கும் எம் சமுகம் மீள் இனைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்டு போராடாவிடின் அத்துபட்டி கிராமத்தின் வரலாறு போல இன்னுமோர் ஒரு தசப்த்ததில் எமது கிராமத்தின் வரலாறும் அழிக்கபடும் என்பது தின்மம்.

வேற்றுமைகள் களைந்து ஒன்றுபடு எம் கிராமமே!😭